Bhakti Pādalgal
● விநாயகர்
● முருகன்
விநாயகர் பக்தி பாடல்கள்
1. விநாயகனே வினை தீர்ப்பவனே (சீர்காழி கோவிந்தராஜன்)
விநாயகனே வினை தீர்ப்பவனே
விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து
விநாயகனே வினை தீர்ப்பவனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்…..
கணநாதனே மாங்கனியை உண்டாய்…..
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
ஶ்ரீ முருகப் பெருமானின் பாடல் (TMS)
முருகனைக் கூப்பிட்டு
முருகனைக் கூப்பிட்டு
முருகனைக் கூப்பிட்டு
முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே
முருகனைக் கூப்பிட்டு.......
முருகனைக் கூப்பிட்டு
முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே
உடல் பற்றிய பிணி ஆறுமே
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)
குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு
குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு
குறைகள் யாவும் போகுமே
அவர் குடும்பம் தழைத் தோங்குமே
குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு
குறைகள் யாவும் போகுமே
அவர் குடும்பம் தழைத் தோங்குமே
சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்
சகல பயம் நீங்குமே
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)
அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
முருகா.................. முருகா....
அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
அருகில் ஓடி வருவான்
அன்பு பெருகி அருள் புரிவான்
அந்தக் கருணை உருவான குருபரன்
என்றுமே கைவிடாமல் ஆளுவான்
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கைகூடுமே
பகை மாறி உறவாடுமே
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கைகூடுமே
பகை மாறி உறவாடுமே
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)
முருகா.................. முருகா....
Comments
Post a Comment